கவர்ச்சியான பெண்களை பயன்படுத்தி இந்தியாவை கதிகலங்க வைக்கும் பாக். உளவுப்பிரிவு
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் தீவிரவாத செயற்பாடுகளுக்கு நிதி யுதவி வழங்குவதற்கும், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைப்பத ற்கும், பாக்கிஸ்தான் உளவுத்துறை யினர் நீண்ட காலமாகவே இந்திய நாணயங்களை போலியாக அச்சிட்டு, புழக்கத்தில் விடுகின்றது என்ற குற்றச்சாட்டை இந்தியா சுமத்தி வருகின்றது.
இதற்கு ஆதாரமாக பாக்கிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.ன் கட்டளைக்கிணங்க நேபாள தலைநகர் காத்மன்டுவில் இருந்து, டெல்லி வருவதற்காக காத்மன்டு விமான நிலையத்தில் இருந்த வெளிநாட்டு பெண் ஒருவரிடமிருந்து பெருமளவிலான இந்திய போலி நோட்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பாக்கிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.ன் கட்டளைக்கிணங்க வியட்நாமில் இருந்து காத்மன்டு ஊடாக டெல்லி வர முயன்ற குறித்த பெண்ணை நேபாள பொலிஸார் கைது செய்து இந்திய உளவுத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதனையடுத்து இந்திய உளவுத்துறையினர் குறித்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது, அதிர்ச்சிதரும் தகவல்களை தெரிவித்த அந்த பெண், "தமக்கு இந்த பணம் யாருடையது என்பதோ, யாருக்கு போய் சேருகின்றது என்பதோ தெரியாது என்றும், டெல்லி விமான நிலையத்தில் வைத்து பணத்தை பெற்றுக்கொள்ள ஒருவர் வருவார் என்றும், அவரிடம் பணத்தை கொடுத்து விடுவதே எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்" என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தாய்லாந்து, நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்தே இந்தியாவுக்கு எதிராக பாக்கிஸ்தான் உளவுத்துறையின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர் என்றும், தற்போது அவர்கள் புதிதாக வியட்நாமையும் தெரிவு செய்துள்ளனர் என்றும், இந்தியாவுக்குள் போலி நோட்டுக்களை கொண்டுபோய் சேர்ப்பதற்கும், இந்தியாவுக்கு எதிரான உளவு நடவடிக்கைகளுக்கும், பாக்கிஸ்தான் உளவுத்துறையினர் வெளிநாட்டு பிரஜைகளையே பயன்படுத்துகிறார்கள் என்றும், அதிலும் கவர்ச்சிகரமான ஆசியப் பெண்களையே பயன்புடுத்துகின்றனர் என, இந்திய உளவுத்துறையினரின் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பாக்கிஸ்தான் உளவுத்துறையினரால் இந்தியாவிற்குள் கொண்டுவரும் போலி நோட்டுக்கள், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க பயன்படுத்தப்படுவதுடன், இந்தியாவுக்குள் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்கள், மற்றும் இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கப்படும் தீவிரவாத அமைப்பினரின் செலவுகளுக்கே பயன்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment