பாரத லக்ஸ்மன் படுகொலை சம்பந்தமான சீடி சட்டமா அதிபரிடம் சமர்ப்பணம்.
பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலை பற்றிய சீடியொன்றை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளித்திருப்பதாக, குற்ற புலனா ய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நேற்று கொழும்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து பணிப்புரைகளைப் பெற்றதன் பின்னர் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சந்தேக நபரான துமிந்த சில்வாவிற்கு தற்போது சிங்கப்பூரில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக துமிந்தவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment