அக்கரைப்பற்று மொட்டியாகலை மலையில் இருந்த, கிறிஸ்துநாதர் காலத்து புராண தாதுகோபம் ஒன்று, புல்டோசரால் அண்மையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக தாம் 119 ம் இலக்கம் ஊடாக அக்கரைப்பற்று பொலிஸாருக்குத் தெரிவித்த்தாகவும், மறுநாள் நேரில் சென்று முறைப்பாடு பதிவு செய்ததாகவும், ஆனால் பொலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்று, அக்கரைப்பற்று சிங்கள அமைப்பின் செயலாளர் எச். சமன் கூறுகின்றார்.
இந்த நிலம் தற்போது நெல் விளைச்சலுக்குப் பொருத்தமானது என்று தயார் செய்யப்பட்டு ள்ளதாகவும், இது சம்பந்தமாக அக்கறைப்பற்று இராணுவ முகாமுக்கு அறிவித்து பாதுகாப்பைப் பெற்றிருப்பதாகவும் சமன் தெரிவித்துள்ளார்.
இது விடயமாக புராவித்யாத்மக சக்கரவர்த்தி பா.ம. உறுப்பினர் வண. எல்லாவலை மெத்தானந்தா தேரரிடம் வினவிய போது, புராண முக்கியத்துவம் பெற்ற பல்வேறு இடங்கள் தற்போது இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment