Wednesday, September 26, 2012

 இலங்கையில் இணையத்தள சுதந்திரத்துக்கு ஆபத்தாம். அமெரிக்க ஆய்வு நிறுவனம்

நெற் 2012 சுதந்திரம் : The Freedom on the Net 2012 என்ற இணையம் மற்றும் மின்னூடகம் பற்றிய உலகம் தழுவிய மதிப்பீட்டு அறிக்கையில், 15% மக்களால் இலங்கையில் இணையம் பயன்படுத்தப் படுகின்றது. எனினும் குடிசார் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒன்லைன் செய்திகள் மற்றும் சமூக-ஊடகங்களைப் பய்னபடுத்துவதில் 2007 ல், அதில் நல்ல அதிகரிப்பு ஏற்பட்டது.

2011 ஜனவரியில் இருந்து தன்முனைப்பாக அந்த இணையத் தளங்களைத் தடுத்தும் அவ்வப்போது அவற்றின் மீது தாக்குதல்களை நடாத்தியும் அரசாங்கம் பதிலளித்து வந்தது. நவம்பரில் “ இலங்கை தொடர்பான உள்ளடக்கங்களைத்” தாங்கிவரும் எந்த இணையத்தளமும் பதிவு செய்யப்பட்ட வேண்டும் என்ற கொள்கையைத் திடீரென்று அறிவித்த்து. அத்துடன் பிரபலமான ஒன்லைன் ஊடகவியலாளரும் கார்ட்டூனிஸ்ட்டுமான ஒருவர் காணாமல் போயுள்ளார், தெளிவாகத் தெரிகின்றது .

20012 ஜூன் மாதம், இரண்டு புதிய இணையத்தளங்களில் பொலிஸ் திடீர்ச் சோதனை நடாத்தியது. ஜூலையில் அத்தகைய இணையத்தளங்களுக்கு புதிய பதிவுக் கட்டணங்களை அறிவித்தது. வருங்காலத்தில் இவை இணையத்தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு கட்டியங் கூறுவதாக அமைந்துள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com