பாணந்துறையில் இயங்கிவந்த விபச்சார விடுதி முற்றுகை! நால்வர் கைது!
நீண்டகாலமாக பாணந்துறையில் இயங்கிவந்த விபச்சார விடுதியை முற்றுகையிட்டு அங்கிருந்த நால்வரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை, பெக்கேகம பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக இரகசியமான முறையில் குறித்த விபச்சார விடுதி இயங்கிவந்ததாகவும், இவ்விடுதியில் ஒருநாளைக்கு ஒரு பெண் மாத்திரமே விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ளார் எனவும், அறையின் வாடகையாக 1,000 ரூபாவும், பெண்ணுக்கு 3,000 ரூபாவும் வழங்கப்பட்டு வந்ததாகவும், ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் ஒருநாளைக்கு எத்தனை வாடிக்கையாளர்கள் வந்தாலும் ஒரு பெண் மாத்திரமே தொழிலில் ஈடுபடுத்தப்படுவார் எனவும் தெரியவந்துள்ளது.
விபச்சார விடுதியின் உரிமையாளர், முகாமையாளர், ஹோமாகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 32 வயதுடைய பெண், முச்சக்கர வண்டிச் சாரதி என நால்வரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
0 comments :
Post a Comment