இந்தியாவில் நித்தியானந்தா! அமெரிக்காவில் பிரகாஷ்! பிரகாஷ் தலைமறைவு
அமெரிக்காவின் டெக்ராஸ் மாகாணத்தில் ஒஸ்டின் நகரிலுள்ள பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி ஆச்சிரமத்திற்கு பக்தர்கள் குடும்பமாக வந்து தங்கியிருந்து வழிபட்டனர். இவ்வேளையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு இளம் பெண்களை தனியாக அழைத்து முத்தமிட்டதாகவும், கட்டி தழுவியதாகவும், பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி (83 வயது) சாமியார் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி மீது கூறப்பட்ட பாலியல் புகாரில் டெக்ராஸ் நீதிமன்றம், கடந்த ஆண்டு அவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனையடுத்து அதிகளவான தண்டனை பணத்தை செலுத்தி வெளியே வந்த சாமியார், தற்போது தலைமறைவாகி விட்டார் என அமெரிக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சாமியாரின் சீடர்கள் தங்கியுள்ள, பென்சில்வேனியா, டெக்ராஸ், கலிபோர்னியா, புளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில் தேடி பார்த்த பொலிஸார் இந்த போலிச்சாமியார் மெக்சிகோ வழியாக, இந்தியாவுக்கு தப்பி சென்று விட்டதாக சந்தேகப்படுகின்றனர்.
0 comments :
Post a Comment