Sunday, September 16, 2012

ஐ.நா எந்த நாட்டிற்கு செல்கின்றதோ அந்த நாட்டிற்கு பிரச்சனை! ஐ.நாவை அனுமதித்தது தவறு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையை (யூ.என்.எச்.ஆர்.சி) இலங்கைக்கு வர அனுமதி அளித்தது அரசாங்கத்தின் முட்டாள்தனம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், ஜாதிக ஹெல உருமயவின் பாராளுமன்றக் குழுத் தலைவர் வண.அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஆதரவுடன் இலங்கைக்கு எதிராக கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட யூ.என்.எச்.ஆர்.சியை வர அனுமதித்து ஏன் என்று அவர் கேள்வி யெழுப்பியுள்ளார்.

அத்துடன், யூ.என்.எச்.ஆர்.சி அலுவலர்கள் லிபியாவுக்குச் சென்றார்கள், அதன் பிறகே கேணல் கடாபிக்கு கேடு விளைந்தது. ஐ.நா காரர்கள் ஈராக், ஆபகானித்தான், சூடான் போன்ற நாடுகளுக்கு எல்லாம் சென்றிருக்கிறார்கள். அவர்கள் சென்று வந்த பின்னர்தான் அங்கெல்லாம் பிரச்சினை. சூடான் பிரிவதற்கு முன்னர் அங்கு போயிருந்த ஜென்னி மெகலி இங்கும் வருகின்றார்.

அமெரிக்கா ஈராக்கில் நுழைந்த போது ஐ.நா எங்கிருந்தது? அது எதை பார்த்துக் கொண்டிருந்நது? ஆப்கானித்தான், ருவான்டா போன்ற நாடுகளில் பொது மக்கள கொலை செய்யப்பட்டபோது ஐ.நா என்ன செய்தது? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தவறான அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். ஆனால். ஜாதி ஹெல உருமய யூ.என்.எச்.ஆர்.சி வருவதை எதிர்க்கும் என வண. அத்துரலிய தேரர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com