முன்னாள் முதலமைச்சராக மாறி இருக்கிறதே தவிர வேறு எது வித மாற்றமும் இல்லை.பிள்ளையான்.
முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சராக மாறி இருக்கிறதே தவிர வேறு எது வித மாற்றமும் இல்லை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன். தமிழ் தேசியம்,வட-கிழக்கு இணைப்பு என்று கோஷமிட்டு கிழக்கு மக்களின் வாக்குகளை பெற்ற நீங்கள் முடிந்தால் 03 வருடங்களில், இணைந்த வட-கிழக்கில் தமிழ் தேசியத்தினை பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையேல் கிழக்கு மாகாண மாகாண சபை முறைமையினை ஏற்று கொண்டு பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்டு ஏமாற்றும் அரசியலை கை விட்டு ஒதுங்கவேண்டும்.
இவ்வாறு மட்டக்களப்பு மயிலம்பாவெளிவித்தியாலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.
ஒரு சமூகத்தின் அடிகட்டுமானமாக உள்ளது அரசியல் அதிகாரமாகும். அவ் அரசியல் அதிகாரத்தினை பேணி பாதுகாத்து தக்கவைப்பதன் மூலமே குறித்த சமூகம் தனது இருப்பை பலப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் கிழக்கு மாகாண தமிழர்கள் மாகாண சபையில் அரசியல் அதிகார இருப்பை இழந்து நிற்கின்றனர். தமிழ் தேசியத்திற்காக வாக்களியுங்கள் என்று கோரிய தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று முஸ்லிம் தேசியத்தினையும்,சிங்கள தேசியத்தினையும் இணைத்து ஆட்சி அமைக்கச் செய்து எதிகட்சி வரிசையில் அமர்ந்து கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டதாக அரசியல் ஆலோசனை வழங்குகின்றது. இதற்காகவா தமிழ் மக்கள் வாக்களித்தார்கள் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்..
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியோ, பிள்ளையானோ மட்டக்களப்பையும், கிழக்கு மக்களையும் விட்டு,விட்டு ஓடப் போவதில்லை. மக்களுக்காக சேவை செய்ய தயாராகவே இருக்கின்றோம். முதல் முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சராக மாறி இருக்கிறதே தவிர
வேறு எது வித மாற்றமும் இல்லை.
சம்பந்தர் அவர்களுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன். தமிழ் தேசியம், வட-கிழக்கு இணைப்பு என்று கோஷமிட்டு கிழக்கு மக்களின் வாக்குகளை பெற்ற நீங்கள் முடிந்தால் 03 வருடங்களில், இணைந்த வட-கிழக்கில் தமிழ் தேசியத்தினை பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையேல் கிழக்கு மாகாண மாகாண சபை முறைமையினை ஏற்று கொண்டு பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்டு ஏமாற்றும் அரசியலை கை விட்டு ஒதுங்கவேண்டும். என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
எதிர்கட்சித்தலைவர் பதவி இரா.துரைரெட்ணத்துக்கே கொடுக்கப்படவேண்டும். கடந்தவருடம் மாகாணசபை உறுப்பினராக இருந்தவர் என்ற வகையிலும்,மட்டக்களப்பு மக்கள் 104,000 வாக்குகள் வழங்கியுள்ள நிலையில் மக்களை ஏமாற்றாமல் மட்டக்களப்பிற்கே
எதிர் கட்சி தலைவர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். மாறாக தண்டாயுதபாணிக்கு வழங்கப்படுமானால் அது ஜனநாயகத்தினை மதிக்காத யாழ் மேலாதிக்க தலைமையாகவே தொடரும் பொறுப்பற்ற செயலாகும்.என்று சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment