முதலமைச்சர் பதவியை இருவர் பகிர சட்டத்தில் இடமில்லை! ஆனால்... - கெஹெலிய
முதலமைச்சர் பதவியை பங்கு போட அரசியலமைப்பில் இடம் இல்லாத போதும், கிழக்கு மாகாகண சபையில் முதலமைச்சர் பதவியை பங்கு போடுவது தொடர்பில் மக்கள் சுதந்திர முன்னணிக்கும் ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக இது சாத்தியம் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவிததுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஐந்து வருடகால முதலமைச்சர் பதவியை பாதி காலத்துக்கு இருவர் பகிரந்து கொள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை, ஆனால் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட ஒருவரை இடையில் பதவியில் இருந்து நீக்கவதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் இரு கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டால் அதன் மூலம் முதலமைச்சர் பதவியை இருவர் பகிர்ந்துகொள்ளலாம். அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment