Saturday, September 8, 2012

ஜனாதிபதி மஹிந்தவிற்கு எதிரான மற்றொரு வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

புலிகளின் முன்னாள் உறுப்பினர் ரமேஷின் மனைவி வத்சலாதேவி, கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி அமெரிக்க நியூயோர்க் மாவட்ட நீதிமன்றில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக செய்திருந்த வழக்கினை, அமெரிக்க நியூயோர்க் மாவட்ட நீதவான் நயோமி புச்வால்ட் தள்ளுபடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தொடரப்படும் சிவில் வழக்குகளின் போது, நாடுகளின் தலைவர்களுக்கு இராஜதந்திர உரிமை வழங்கப்பட்டு வருவதாகவும், இது பல வருடங்களாக பின்பற்றப்பட்டு வரும் ஒர் நடைமுறை எனவும், அதனடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இராஜதந்திர உரிமை காணப்படுவதனால் குறித்த மனுவினை ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்ய முடியாது எனவும தீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக கடந்த பெப்ரவரி மாதமும் இதேபேன்று வழக்கொன்றை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment