முதலமைச்சராக தான் வரமுடியாது என்பதை பிள்ளையான் அறிந்திருந்தாராம்
கிழக்கு மாகாணத்தின் புதிய முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் தெரிவு செய்யப்பட்டது தொடர்பில், கருத்து தெரிவித்த முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திர காந்தன், ஐ.ம.சு முன்ணணிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் இதனாலேயே நஜீப்பை முதலமைச்சராக நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் முதலமைச்சராக தான் மீண்டும் வரமுடியாது என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் தன்னால் உணர்ந்து கொள்ள முடிந்ததாகவும் ஏற்கனவே முதலமைச்சர் பதவியிலிருந்து பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்த தான், பின்னர் அமைச்சர்கள் வாரியத்தில் இருப்பது நடை முறைக்கு சாத்தியமற்றது எனவும், அமைச்சர்கள் ஒதுக்கீட்டு தெரிவில் அரசாங்கத்தில் சில சிக்கல்கள் இருந்ததால்தான், அமைச்சர் பதவியைப் பெற விரும்பவில்லை என, பிள்ளையான தெரிவித்துள்ளார்.
மேலும் மாகாண சபை உறுப்பினர் பதவியுடன் ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி மூலம், தன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தான் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும், சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தள்ளார்.
0 comments :
Post a Comment