''பள்ளிச் சிறுமிகளை சீரழித்து செக்ஸ் அடிமைகளாக்கினார் கடாபி''
பள்ளிச் சிறுமிகளை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்து பின்னர் அவர்களை தனது செக்ஸ் அடிமைகளாக மாற்றி வைத்திருந்தார் லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபி. மேலும் தான் இன்டர்நெட்டில் இமெயில்களை செக் செய்யும்போது அவர்கள் தனக்கு செக்ஸ் ரீதியான சேவைகளைச் செய்ய வேண்டும் என்றும்
அவர் பணித்து வந்தார் என்றும் ஒரு நூலில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸைச் சேர்ந்த பத்திரிக்கை நிருபர் அன்னிக் கோஜன் என்பவர் ஒரு நூல் எழுதியுள்ளார். அதில்தான் இந்தத் தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து 2004ம் ஆண்டு கடாபியால் சீரழிக்கப்பட்டவரும், அப்போது 15 வயது கொண்டிருந்தவருமான சொரயா என்ற பெண் கூறுகையில், எனது பள்ளிக்கு கடாபி சிறப்பு விருந்தினராக வந்திரு்தார். அப்போது என்னை அவருக்கு பூங்கொத்து கொடுக்க தேர்வு செய்திருந்தனர். நான் பூங்கொத்தைக் கொடுத்தபோது அவர் எனது தலையில் ஆசிர்வதிப்பது போல கை வைத்தார். ஆனால் அதற்கு அர்த்தம் வேறு என்று எனக்குப் பிறகுதான் தெரிந்தது. அதாவது தலையில் அவர் யார் மீது கை வைக்கிறாரோ, அவர் தனக்கு வேண்டும் என்று அவர் சைகை செய்வதாக அர்த்தமாம்.
அடுத்த நாளே எனது தாயார் வைத்திருந்த சலூன் கடைக்கு யூனிபார்ம் போட்ட பெண்கள் சிலர் வந்தனர். பின்னர் கடாபி என்னை சந்திக்க விரும்புவதாக கூறினர். அதையடுத்து எனது தாயார் என்னை அனுப்பி வைத்தார். பல மணி நேரம் என்னை காரில் கூட்டிச் சென்றனர். பின்னர் பாலைவனப்பகுதகியில் அமைந்திருந்த ஒரு சிறிய கூடத்திற்குக் கூட்டிச் சென்றனர். உள்ளே போய்ப் பார்த்தால் கடாபி நிர்வாணமாக உட்கார்ந்திருந்தார். அது ஒரு படுக்கை அறையாகும்.
இதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அப்போது கடாபி எனது கையைப் பிடித்து தனக்கு அருகில் உட்கார் வைத்தார். என்னால் பதட்டத்தை அடக்க முடியவில்லை. அதைப் பார்த்த அவர் பயப்படாதே, நான் உனக்கு அப்பா மாதிரி. அப்படித்தான் உனக்கும் தோன்றியிருக்கும். அதேசமயம், நான் உனது சகோதரனும் கூட, ஏன் காதலனும் கூட என்று கூறினார். உனக்கு இனிமேல் நான்தான் எல்லாமே என்றும் பெரிதாக சிரித்தபடி கூறினார். இனிமேல் நீ இங்குதான் என்னுடன்தான் நீ இருக்கப் போகிறாய் என்றும் அவர் கூறியபோது எனக்கு இதயமே வெடித்துப் போய் விட்டது.
இதையடுத்து நான் அவரிடமிருந்து விடுபட முயன்றேன். இதைப் பார்த்த அவர் பர்தா அணிந்திருந்த மெப்ருகா என்ற பெண்ணை அழைத்து, இவளுக்கு நன்றாக கற்றுக் கொடுத்து என்னிடம் அனுப்பு என்றார்.
அதன் பின்னர் என்னை பலமுறை கடாபி பாலியல் பலாத்காரம் செய்தார். அடித்தார், உதைத்தார், என் மீது சிறுநீர் கழித்தார். கிட்டத்தட்ட 5 வருடங்கள் நான் நரகத்தில் இருந்தேன்.
அவர் இமெயில் பார்க்க உட்காரும்போது என்னைப் போல பல பெண்களை தன்னைச் சுற்றி வைத்துக் கொள்வார். ஓரல் செக்ஸில் அவர்கள் ஈடுபடுவார்கள். என்னையும் கட்டாயப்படுத்தி ஈடுபட வைப்பார்கள். ஒரு பெண்ணை செய்யச் சொல்லி விட்டு, இதைப் பார்த்துக் கற்றுக் கொள். இதே போலத்தான் நீயும் செய்ய வேண்டும் என்று கூறுவார் கடாபி.
மெப்ருகாதான் என்னிடம் ஆபாசப் படங்களைப் போட்டுக் காட்டி பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்துவார் என்று கூறினார் சொரயா.
அப்போது 18 வயதான ஹூடா என்ற பெண் கூறுகையில், என்னை ஐந்து வருடம் சித்திரவதை செய்தார் கடாபி. அவரது பிடியில் சிக்கியிருந்த எனது சகோதரனை விடுவிப்பதற்காக அவருடன் செக்ஸ் வைத்துக் கொள்ள நான் உடன்பட்டேன் என்றார்.
இன்னொரு பெண் கூறுகையில், என்னை முழுக்க நிர்வாணப்படுத்தி விட்டு, பிறகு மிகவும் மெல்லிதான பேண்டீஸை அணிந்து கொள்ளச் சொல்லி அதை ரசித்துப் பார்த்தார் கடாபி. மேலும் ஆபாசப் படங்களைப் போட்டுக் காட்டி தன்னுடன் அமர்ந்து பார்க்குமாறு கட்டாயப்படுத்தினார். அவருக்கு ஒரு நாளைக்கு பல பெண்கள் தேவைப்படும் என்றார்.
சொரயா மீண்டும் கூறுகையில், என் கண் முன்பாகவே பல சிறுமிகளை அவர் பலாத்காரம் செய்தார். அதை என்னைப் பார்க்குமாறும் உத்தரவிடுவார் என்றார்.
கடாபியிடம் இதுபோல செக்ஸ் அடிமைகளாக இருந்து மீண்ட சிறுமிகள் இன்று இளம் வயதைக் கடந்து விட்டனர். ஆனால் இன்னும் கூட அந்தக் கொடுமையின் அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீளவில்லை. மேலும் அவர்களை அவர்களது குடும்பத்தினரும் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்து விட்டதால் பலருக்கு மன நலமே பாதித்து விட்டதாம்.
சொரயா கூறுகையில், என்னால் குடும்பத்துக்கு அவமானம் வந்து விட்டதாக கூறி வரும் எனது சகோதரர்கள் என்னைக் கொல்லத் துடிக்கிறார்கள். இதனால் நான் தலைமறைவாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டேன் என்றார்.
0 comments :
Post a Comment