நீதிச் சேவை இப்படியென்றால் ....மற்றவர்கள்.....? - ஜனாதிபதி.
நீதிச் சேவை ஆணையத்தின் உயர் பதவியில் உள்ள ஒருவர், தனது பாலியல் வற்புறுத்தல்களுக்கு இணங்காத இளம் பெண் நீதவான் ஒருவரை, ஒரு ஆண்டிற்குள் ஏழு தடவை இடமாற்றம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவரின் தந்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
26ம் திகதிய அமைச்சரவைக் கூட்டத்தில் அந்தக் கடிதம் பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சட்டத்தைக் காக்க வேண்டியவர்களே இவ்வாறு நடந்து கொண்டால் மற்றவர்கள் எவ்வாறு நடந்து கொண்வார்கள் என்று கேட்டுள்ளார்.
இது பற்றி விசாரித்து முடிவு எடுப்பதற்கு அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வாவின் தலைமையில் அமைச்சர்கள் பலரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment