இலங்கைப் படைகளுக்கு இந்தியாவில் தொடர்ந்து சிறந்த பயிற்சி – ஜெனரல் ஏ.கே.சிங்.
இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் சிறந்த பயிற்சி அளிக்கப்படுகின்றது என்று, தென் பகுதிக்கான இந்திய பொதுக் கட்டளைத் தளபதி ஜெனரல் ஏ.கே. சிங் தெரிவித்துள்ளார். இது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட பிற அரசியல் தலைவர்கள் யாவருக்கும், நல்ல ஒரு பதிலாக அமைந்துள்ளதுடன், அவர்களை கொதிப்படைய வைத்துள்ளது என்று டெக்கான் குரோனிகல் குறிப்பிடுகின்றது.
இலங்கை எமது நட்பு நாடு, அவர்களுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளிக்கும் என்று மத்திய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பளம் ராஜு கூறியிருந்த்தார்.
அத்துடன், சென்னையில் இலங்கை உதை பந்தாட்டக் குழுவினரை விளையாடாமல் தடுத்ததற்கும், திருச்சியல் யாத்திரிகர்கள் தாக்கப்பட்டதிற்கும், பல்வேறு அமைப்புக்களும் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment