இராணுவ விசாரணையில் புலனாய்வுப் பிரிவு மேஜர் குற்றவாளியாக இனம் காணப்பட்டுள்ளாராம்!
மாலக சில்வாவினால் இராணுவ புலனாய்வுப் பிரிவு மேஜர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான இராணுவ விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், இந்த விசாரணைகளின் போது, குறித்த இராணுவ புலனாய்வுப் பிரிவு மேஜர் குற்றவாளியாக இனம் காணப்பட் டுள்ளார் என இராணுவ விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
மேற்படி சம்பவம் நடைபெற்ற போது, மேஜர் உத்தியோக பூர்வ கடமையில் இருந்ததாக தெரிவித்த போதும், குறித்த மேஜர் உத்தியோகபூர்வ பணி நிமித்தம் அங்கு அவர் செல்லவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவ விசாரணைக்குழு தெரிவிக்கின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய மேஜர் தொடர்பில், மூவரடங்கிய குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இலங்கை இராணுவத்தின் சட்டப்பிரிவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும், மேற்படி சட்டப்பிரிவானது தனது அறிக்கையை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் இன்று கையளிக்கவுள்ளது எனவும், இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய அபிப்பிராயத்தின் அடிப்படையில் இராணுவ சட்டப்பிரிவானது மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment