Tuesday, September 11, 2012

ஆட்கடத்தல் முகவர்களிடையே எல்.ரி.ரி.ஈ யினரின் முன்னாள் ஆயுத நிபுணர்.

நல்ல வாழ்க்கை வாழ்வதற்காக தங்களிடம் ஏமாந்து வந்த 84 பேருடன், அவுஸ்த்திரேலியா புறப்படவிருந்த இலங்கைத் தமிழ் அகதிகள், மற்றும் இந்தியர்கள், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்பொழுது மங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 13 முகவர்கள் உள்ளடங்குகின்றனர்.

அந்த 13 முகவர்களில் 12 பேர் இலங்கை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் துணுக்காய் கொக்காவில்பற்றைச் சேர்ந்த தவராசா(46). முன்னாள் எல்.ரி.ரி.ஈ பேராளியான இவர் இந்தியாவிலுள்ள பொலிசாரைவிட சுடுகலன்கள் மற்றும் ரொக்கற் லோஞ்சர்ஸ் பற்றிய அறிவு நிரம்பியவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மற்ற சந்தேக நபர்கள் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் பரமதிவேலூர் தாலுகா, சி.ஆர் முகாமைச் சேர்ந்த சி. தினேஸ்குமார் (27), புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா சி.ஆர் முகாமைச் சேர்ந்த ராஜீவ்காந்தி அல்லது கந்தன் (28), வேலூர் மாவட்டம் வலயாபேட்டைச் சேர்ந்த மரிய ஜம்சன் (22), மதுரை மாவட்டம் திருமங்களம் தாலுகா எஸ்.எல்.ஆர் முகாமைச் சேர்ந்த சிலகுமார் (28), திருமங்களம் மாவட்டம் தாலுகா எஸ்.எல்.ஆர் முகாமைச் சேர்ந்த எஸ். ரவிச்சந்திரன் (30), திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடுபூண்டி மகேந்திரன் (41), புதுக்கோட்டை தோப்புக்கொல்லை எஸ்.சுரேஷ் (26), மற்றும் ஆலங்குடி தாலுகா மரிய சிரான் (33), கோயம்புத்தூர் சிகோ வீட்டுத் திட்டம், சிராஜ்(37), குனியமுதூர் யாக்கூப் (40), மற்றும் வேலூர் மாட்டம் வாலாஜபேட்டை கிராமினி வீதி சலீம் ஆகியோரே கைது செய்யப்பட்ட முகவர்களாவர்.

பாலக்காடு மாவட்டம், கஞ்சு கோடு மொய்யாமார்க்காடைச் சேர்ந்த சாஜகான் (33) மாத்திரமே இந்தியராவார். வெளிநாட்டவர் கட்டளை 5ம் பந்தியின் வெளிநாட்டார் சட்டத்துடன் இந்திய தண்டனைக் கோவை 420ம் பிரிவை பிரிவு 120 உடன் சேர்த்து இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக மங்களூர் வடக்கு பொலிஸ் நிலையத்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக நகர பொலிஸ் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்த 13 சந்தேக நபர்கள் ஒவ்வொருவரினதும் சரியான நடவடிக்கைகளையும், இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவுக்கு கடத்த வசதி செய்து கொடுக்கும் இவர்களின சரியான வரலாற்றையும், பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment