மட்டு திருமலை மாவட்ட விருப்பு வாக்குகளின் விபரம்
மட்டக்களப்பு மற்றும் திருமலை மாவட்டத்தில் போட்டியிட்டோருக்கான விருப்பு வாக்கு விபரங்கள் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக
சார்பில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் 29,148 வாக்குகளையும்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைராஜசிங்கம் 27,719 வாக்குகளையும்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெள்ளிமலை என்று அழைக்கப்படும் ஞா.கிருஷ்ணபிள்ளை 20,200 வாக்குகளையும்
ரெலோ அமைப்பபை பிரதிநிதிதுப்படுத்திய வர்த்தகர் இந்திரகுமார் பிரசன்னா 17,304 வாக்குகளையும்
முன்னாள் மக்கள் வங்கி முகாமையாளர் மா.நடராசா 16,681 வாக்குகளையும்
ஜனா என்று அழைக்கப்படும் கோ.கருணாகரம் 16,536 வாக்குகளையும் பெற்று சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக
முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் 22,338 வாக்குகளையும்
முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.அமீரலி 21,271 வாக்குகளையும்
பொறியியலாளர் சிப்லி பாரூக் 20,407 வாக்குகளையும்,
முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் 19,303 வாக்குகளையும் பெற்று சபைக்கு தெரிவாகியுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக
கட்சியின் பிரதி தலைவர் ஹாபீஸ் நஷீட் அஹமட் 11,401 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்திலிருந்து
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் ஆரியவதி கலபதி 14,224 வாக்குகளையும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரியந்த பத்திரன 12,393 வாக்குகளையும்
முன்னாள் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் 11,726 வாக்குகளையும் பெற்று சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில்
கிழக்கு மாகாண முன்னாள் கல்வி பணிப்பாளரான எஸ். தண்டாயுதபாணி 20,850 வாக்குகளையும்
குமார்சுவாமி நாகேஸ்வரன் 10,910 வாக்குகளையும்
யாழ். பல்கலைக்கழக மாணவரான ஜெஹதீஸன் ஜனார்த்தனன் 8,560 வாக்குகளையும் பெற்று சபை உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ரம்ழான் அன்வர் 10,904 வாக்குகளையும்
ஹசன் மௌலவி 10,123 தெரிவு செய்யப்பட்டுள்ளளார்.
ஐக்கிய தேசிய கட்சி சார்பாக
கிண்ணியாவை சேர்ந்த இம்ரான் மஹ்ரூப் 10, 048 வாக்குகளை பெற்று சபைக்கு தெரிவாகியுள்ளார்.
அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி சார்பாக
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜயசேகர 7,303 வாக்குகளைப் பெற்று சபைக்கு தெரிவாகியுள்ளார்.
0 comments :
Post a Comment