த.தே.கூட்டமைப்பின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை - கோத்பாய
ஐ.நா. மனித உரிமை ஆணையரின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்தி ப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் தெரிவித்த குற்றச்சாட்டு க்களில், எந்தவித உண்மையும் இல்லையெனவும், இந்தக்குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை என, நகர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்பாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது என்றுமில்லாதவாறு வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து வருவதாகவும், யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் அரசாங்கம் மேற்கோள்ளும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில், தமிழ் மக்கள் திருப்தி அடைந்துள்ளதுடன், சர்வதேச சமூகமும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் திருப்தி அடைந்துள்ளனர் எனவும், இதை பொறுத்துக் கொள்ள முடியாத சில தரப்பினர், அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு வருககின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எல்.ரி.ரி.யினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட வேளையில் அமைதி காத்து அதை ஊக்குவித்த தரப்பினரே, இன்று அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர் என்பதனை சர்வதேச சமூகம் நினைவில் வைக்க வேண்டும் எனவும், சர்வதேச நாட்டு பிரதிநிதிகள் இலங்கையின் நிலைமைகளை நேரில் வந்து பார்வைவயிட வேண்டும் எனவும், அதற்கு எவ்வித தடைகளும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், எல்.ரி.ரி.யினர் மக்களை தமது சொந்த இடங்களிலிருந்து விரட்டியடித்த போது, அதை ரசித்த தரப்பினரே இன்று வடக்கு கிழக்கில் பலவந்தமாக குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தி வருகின்றனர் என கோத்பாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment