இலங்கை ஒரு சிறிய நாடு! இங்கு மாகாண சபை ஆட்சி முறை தேவையில்லை – கிழக்கு முதலமைச்சர்
இலங்கை சிறிய நாடு என்பதால், மாகாண சபை ஆட்சி முறையை தான் விரும்பவில்லை எனவும், மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்க வேண்டிய அவசியமில்லை எனவும், கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்று வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என்றும், ஆரம்பத்தில் இருந்தே வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஆளுநரின் ஆட்சியிலேயே இருந்து வந்துள்ளதுடன், நாட்டின் மற்றய பகுதிகளிலும் மாகாண சபைகள் இயங்கி வந்தன என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்தியாவை போல பெரிய நாடு அல்ல இது ஒரு சிறிய நாடு, இதனால் இங்கு மாகாண சபைகள் அவசியமில்லை என்பதே எனது நிலைப்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment