பிள்ளை விடயத்தில் தவறான கருத்து நிலவுகின்றது! பிள்ளை வரவேற்கப்படுவார்.-ஜி.எல்.பிரிஸ்
போருக்குப் பின்னர் அரசியல் மற்றும் மனித உரிமைகள் பிரசினையை முற்று முழுதாக தீர்த்துக் கொள்வத ற்கான சந்தர்ப்பம் அமைந்துள்ளது எனவும், ஏனெனில், அதைச் செய்வதற்கு ஆற்றலுள்ள ஒரு தலைவர் மகிந்த ராஜபக்ஷ என்றும், எமது கையிலிருந்து இந்த வாய்ப்பை நழுவிச் செல்ல விடுவோமானால், அது, இன்று ஒரு உண்ணாட்டு செயன்முறைகளின் கட்டமைப்பில் கிடைத்திருக்கும் நல்ல தீர்வின் நன்மையை, நாமே நிராகரிக்கின்றவர்களோம் என ஜி.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகதில் நடைபெற்ற பொருளாதார பன்னாட்டு கருத்தரங்கில் கலந்து கொள்ள இலண்டன் வந்திருந்த இலங்கை வெளிநாட்டமைச்சர் பேரா. ஜி. எல். பீரிஸ், சில பிரித்தானிய எம்,பிக்கள், பொதுநலவாய அமைப்பு பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா, பொதுநலவாய வர்த்தக கவுன்சில் தலைவர் மோகன் கூல், என்போரை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், புலம் பெர்ந்தோரில் ஒரு பகுதியினர் வடக்கு மக்களின் வாழ்க்கையை இலகுவானதாக்கவும், அந்த மக்களுக்கு நன்மை செய்யவும், பங்களிப்பு செய்கின்றார்கள். வேறு சிலரோ புலிகளின் தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும், மறுத்து படகை கவிழ்க்க முனைகிறார்கள் என்று கருத்து தெரிவித்தார்.
மேலும், நவநீதம்பிள்ளையின் இலங்கை வருகை பற்றிக் குறிப்பிட்ட போது, இந்த விடயத்தில், பெரிய தவறான கருத்து நிலவுகின்றது. இந்தாண்டு ஆரம்பத்தில் மனிதவுரிமை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும், இவருக்கு அழைப்பு விடுத்தமைக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. அத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என ஜி.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment