Tuesday, September 25, 2012

ஹக்கீமுக்கு பை(Bag) தூக்கித் தூக்கி தேசியப்பட்டியல் பா.உ. பதவியை பெற்றார் அஸ்லம்

ஹக்கீமின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது. இது அவருடைய கடைசித் தேர்தல் - அசாத்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நான் ஒரு வீட்டுக்கும் போகாது வாக்குகளை பெற்றேன். ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்களை ஏமாற்றி விட்டது. எனவே முஸ்லிம் காங்கிரஸுக்கு நேரமிருக்கின்றது. தாமதிக்காமல் கிழக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோரி பிழையை திருத்திக்கொள்ள வேண்டும் எனவும், கிழக்கு மாகாண சபைத் தேர்தலே ஹக்கீமின் இறுதித் தேர்தலாகும் என்றும், அவரால் இனிமேல் கண்டியில் அல்ல, அம்பாறையிலும் தேர்தலில் போட்டியிட முடியாது என அஸாத்சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் மொஹமட் சலீம், என்னை குரங்கென்றும், கொள்கையில்லாதவர் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் நான் அவர் போல பை(Bag) தூக்கும் தவளையல்ல. பாய்ந்து பாய்ந்து பை (Bag) தூக்கியமையால் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரான சப்பீக் ரஜாப்டீனுக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி அஸ்லமுக்குக் கிடைத்தது. அஸ்லமுக்கு மாகாண சபையில் அல்ல, பிரதேச சபையில் கூட ஒரு ஆசனமேனும் கிடைக்கவில்லை, கிடைக்கவும் மாட்டாது. அதனால், ஹக்கீமுக்கு பை(Bag) தூக்கித் தூக்கி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினா பதவியை பெற்றுக்கொண்டார்

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இரண்டு அமைச்சுப் பதவிகளை வகிக்கமுடியாது என்று தனக்கு அறிவுறுத்தியதை அடுத்தே, அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார் என்றும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அமைச்சுப் பதவிகளை வகிக்கக் கூடாது என்பது நல்ல யோசனையாகும் என்றும், அதனை அமுல்படுத்த வேண்டும். அவ்வாறு அமுல்படுத்தினால் ராஜபக்ச குடும்பத்தில் எத்தனை பேர் மிஞ்சுவர் என அஸாத்சாலி கோள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை தோற்கடிக்கவேண்டும் என்ற நோக்குடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் சேர்ந்தேன், ஒரு கொள்கையுடனேயே செயற்பட்டேன். நான் மரத்துக்கு மரம் தாவும் குரங்கென்றால், பை(Bag)தூக்கித் தூக்கி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்ற அஸ்லம் மொஹமட் சலீம் பை(Bag) தூக்கும் தவளை என அஸாத்சாலி தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com