ஐ. நாடுகளின் 67வது மாநாட்டில், 26ம் திகதி ஜனாதிபதி உரையாற்றுவார்
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 67 வது மாநாடு செப்டம்பர் 25 ம் திகதி நியுயோர்க்கில் அதன் தலைமை யகத்தில் ஆரம்பமாகிறது. இடைக்கால நிகழ்ச்சி நிரலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 26 ம் திகதி பிற்பகல் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பலநாடுகளில் இருந்து வரும் தலைவர்களும் அங்கு உரையாற்றுவார்கள். அத்துடன் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம், மற்றும் பிற உலக தலைவர்களுடனும் சந்திப்புகளையும், கலந்துரையாடல்களையும், மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 66வது மாநாட்டில் அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனையும் சந்தித்து, தருஸ்மன் அறிக்கை பற்றியும் கலந்துரையாடினார். அதேபோல இம்முறையும அவர் பான் கீ மூனைச் சந்திக்க வாய்ப்பு உள்ளது என நம்பப்படுகின்றது.
0 comments :
Post a Comment