மட்டக்களப்பு மருத்துவமனை அவசரகால சேவைக்கு அவுஸ்திரேலியர்கள் ரூபா 62 கோடி நன்கொடை.
அவுத்திரேலியா, விடோரியாவில் உள்ள ' இலங்கையில் தேசிய அதிர்ச்சி சேவைக்கு உதவும் மன்றத்தின்' நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் கிழக்கு மாகாணத்தில் புதிய விபத்துக்கான அவசரகால வசதிகளுக்கான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக ரூபா 52 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்கள்.
இக்கட்டிடடம் மட்டக்களபு போதனா மருத்துவ மனையில் 2014 ல் கட்டி முடிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்து.
இந்த கட்டிடம், ஐந்து மாடிகள், மற்றும் நூறு படுக்கை வசதிகள் கொண்ட இரண்டு வார்டுகளைக் கொண்டிருக்கும். சீரி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்-ரே அறைகள் மற்றும் தனிமைப் படுத்தல் அறைகளைக் கொண்டிருக்கும். போருக்குப் பின்னரான அபிவிருத்திகள், குறிபாக தெருக்கள் அபிவிருத்தி மற்றும் மக்கள் தொகைப்பெருக்கம் என்பன விபத்துக்களை அதிகரிக்கச் செய்துள்ளன பேச்சாளர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு அவசரகால மற்றும் விபத்து செயற்றிட்டத்துக்கான (டீநுயுP) புரிந்துணர்வு உடன்படிக்கை சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் நிகால் ஜயதிலக்க மற்றும் அவுத்திரேலியா, விடோரியாவில் உள்ள ' இலங்கையில் தேசிய அதிர்ச்சி சேவைக்கு உதவும் மன்றத்தின்' நம்பிக்கைப் பொறுப்பின் தலைவர் டாக்டர் டேவிட் யங் மற்றும் அதன் தேசிய இணைப்பாளர் நிகால் டி ரான் ஆகியோர் ஆகியோரால் கைச்சாத்திடப்பட்டது
0 comments :
Post a Comment