அடுத்த கட்டமாக 600 இலங்கையர்களை நாடுகடத்துகின்றது பிரித்தானியா.
பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ள 600 இலங்கையர்களை, மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பயங்க ரவாதம் நிலவிய காலத்தில் பல்வேறு காரணங்களைக் கூறி பிரித்தானியாவில் குடியுரிமையைக் கோரிய அவர்களின் கோரிக்கையை பிரித்தானியா நிராகரித்துள்ளது.
அத்துடன், தற்போது இலங்கையில் சமாதானம் நிலவுவதால், இலங்கையர்கள் பிரித்தானியாவில் குடியுரிமை கோர வேண்டிய அவசியம் இல்லையென்று தெரிவித்துள்ளதுடன், இந்த 600 போரும் எதிர்வரும் நான்கு மாதங்களிற்குள் இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment