அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. யினர், உளவு விமானங்களால் மேற்கொள்ளும் ஏவுகணை தாக்குதல்கள் இன்னமும் தொடர்கின்றன. எனவே அதை ஒபாமாவின் எதிர்த் தரப்பினர் தமது பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.
உளவு விமானங்கள் ஏவும் ஏவுகணைகளால் தீவிரவாதிகள் கொல்லப்படுவதைவிட, அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகம் என எதிரணியினர் பிரசாரம் செய்கின்றனர். இந்த விவகாரம் தேர்தலில் தமக்கு பாதகமாகலாம் என்பதை புரிந்து கொண்ட ஒபாமா, உளவு விமான தாக்குதல் தொடர்பான 5 விதிமுறைகளை அறிவித்துள்ளார்.
இந்த 5 விதிமுறைக்கும் பொருந்தி வந்தால்தான், அமெரிக்க உளவு விமானங்களை இனி ஏவுகணை ஏவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது (1) உளவு விமானம் குறிவைக்கும் நபர் கொல்லப்படகூடிய நபர் என்பதை அமெரிக்க சட்டம் ஏற்றுக் கொள்ளும்படி இருக்க வேண்டும். (2) குறிப்பிட்ட நபரால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் நிஜமாக இருக்க வேண்டும் அது ஊகமாக இருக்க கூடாது. (3) கொல்லப் படவுள்ள நபரை நாம் உயிருடன் பிடிக்க முடியாத சூழ்நிலை இருக்க வேண்டும். (4) அந்த நபர், அமெரிக்காவை தாக்கும் ஏதாவது ஒரு திட்டத்தில், ஏதோ ஒரு வகையில் சம்மந்தப்பட்டிருக்க வேண்டும். (5)குறிப்பிட்ட நபரை கொல்லும்போது, பொதுமக்கள் கொல்லப்பட கூடாது.
மேற்குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு பெருந்தும் விதத்தில், உளவு விமான தாக்குதல்களை நடத்த வேண்டும் என ஒபாமா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment