Thursday, September 13, 2012

இசட் புள்ளி நெருக்கடிக்கு தீர்வு! மேலதிகமாக 5609 மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி

இசட் புள்ளி நெருக்கடியை தீர்த்து வைப்பதற்கு, மேலதிகமாக 5609 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்வதற்கு, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு சமர்ப்பித்த பிரேரணையை நடைமுறைப்படுத்த, உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த மனு, நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கு விளக்கமளிக்கையில், நெருக்கடியை தீர்த்து வைப்பதற்கு, மேலதிகமாக 5 ஆயிரத்து 609 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ள முடியுமென, தெரிவித்தது. இவ்வாண்டு இணைத்துக்கொள்ளும் 21 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு மேலதிகமாக, இவர்களை இணைத்துக்கொள்ள முடியுமென, தெரிவித்தது.

இந்த யோசனை மிக பெருத்தமானதென தீர்ப்பு வழங்கிய பிரதம நீதியரசர் தலைமையிலான மூவர் அட ங்கிய குழு, இதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியுமென, தெரிவித்தது. அத்துடன் மூன்றாவது முறையாக உயர்தர பரீட்சைக்கு தோற்றி, இந்நெருக்கடியினால் அநீதிக்குட்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் பரீட்சைக்கு தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பாக, கவனம் செலுத்துமாறு, உயர்நீதிமன்றம், அரசாங்கத்திற்கு பரிந்துரையொன்றை சமர்ப்பித்துள்ளது.

No comments:

Post a Comment