Tuesday, September 4, 2012

5ம் ஆன்டு மாணவர்களை தூண்டி நடாத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை தெரிவிக்கின்றார் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் பதவியை வகித்த போதிலும் தான் ஒரு ஆசிரியர் அல்லவெனவும், தான் ஏற்கனவே புரிந்த தொழிலிலிருந்து இடை நிறுத்தப் பட்டதாகவும், அதன் பொதுச் செயலாளர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவித்துள்ளார்.

5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு இரகசிய பொலிஸார் விடுத்த வேண்டுகோளின் பேரில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க, இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் அளித்தபேதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியானதாக தெரிவிக்கபட்ட கருத்தின் உண்மை பொய் தொடர்பாக தனக்கு நம்பிக்கையில்லையென அவர் இரகசிய பொலிஸாரடம் தெரிவித்தார்.

எனினும், பி.பி.சி உலக சேவைக்கு அவர் கருத்து தெரிவிக்கும் போது, வினாத்தாள்கள் வெளியானமை தொடர்பாக போதிய சாட்சிகள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார். இது போன்ற ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்கள் மூலம் பரீட்சை தொடர்பாக பல்வேறு முரண்பாடுகளை ஏற்படுத்தியமை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளரான மஹிந்த ஜெயசிங்க குறித்து விசாரணை நடந்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் வெளியாளதாக குற்றஞ்சாட்டில் பாடசாலை மாணவர்களை தூண்டி ஆர்ப்பாட்டம் நடத்த முடியாத வகையில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்திற்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரகசிய பொலிஸார் விடுத்த வேண்டுகோளின் படி கம்பஹா நீதவான் பேமா சுவர்னாதிபதி இவ்வுத்தரவை பிரப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment