கள்ளக்காதலியுடன் தற்கொலை செய்து கொண்டார் 47 வயது காதலன் - கெக்கிராவில் சம்பவம்
கெக்கிராவ மடாட்டுகல பகுதி வீடொன்றினுள் இருந்து ஆண் மற்றும் பெண் ஆகியோரின் சடலங்கள் மீட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிராவை பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
47 வயதுடைய ஆணும் 50 வயதுடைய பெண்ணுமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த பெண் ஆணின் கள்ள மனைவி என தெரியவந்துள்ளது.
சடலங்கள் இருந்த இடத்தில் கிருமிநாசினி போத்தல் மற்றும் சாராய போத்தல் என்பன மீட்கப்பட்டுள்ளன. கிருமிநாசினி உடலில் சேர்ந்ததால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment