ஐ.நா பாதுகாப்பு சபையை மாற்றியமைக்க வேண்டும் - ஜீ 4 நாடுகள் கோரிக்கை
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை மாற்றியமைக்க வேண்டுமென , ஜீ 4 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 67 ஆவது கூட்டத்தொடரிலேயே, குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜீ 4 நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும், இந்தியா, பிரேசில், ஜேர்மன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 67 ஆவது கூட்டத்தொடரில் குறித்த விடயம் தொடர்பில் விவாதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில்இ ஏற்கனவே 5 நாடுகள் மாத்திரமே நிரந்தர உறுப்பு நாடுகளாக அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில் தம்மையும் நிரந்தர உறுப்பு நாடுகளாக இணைத்துக்கொள்ள வேண்டுமென ஜீ 4 நாடுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment