Thursday, September 13, 2012

இது 3ஆம் தரப்பின் தகவல் அல்ல! நான் நேரில் சென்று யதார்த்தத்தை அறிந்து கொண்டேன்!

எதிர்கால பரம்பரைக்கு சிறந்த அத்தி வாரம் ஒன்றை ஏற்படுத்தி கொடுத்த மைக்காக இலங்கை அரசாங்கத்தை சர்வதேசம் பாராட்ட வேண்டுமென பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில், நான் திருக்கோவில் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டேன். முன்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த இப்பிரதேசத்தில் இளைஞர் யுவதிகளின் எதிர்கால வெற்றிக்காக பொதுநலவாய அமைப்பின் அனுசரனையில் பல்வேறு செயல்த்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது 3 ஆம் தரப்பின் தகவல் அல்ல. நான் நேரில் சென்று யதார்த்தத்தை அறிந்து கொண்டேன்.

எதிர்கால பரம்பரையினரை பலப்படுத்துவதே பொதுநலவாய அமைப்பின் பிரதான நோக்கம். அந்த இலக்கை நோக்கி வெற்றிகரமாக பயணமாவதன் மூலம் இலங்கை அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் உதாரணமாக திகழ்கின்றது. இன்று இலங்கையிலிருந்து புறப்படுகின்றேன். இலங்கையின் தற்போதைய சவால்களை மட்டுமல்லாமல், இலங்கைக்கு தற்போதைக்கு அவசியமான தேவைகள் தொடர்பான புரிந்துணர்வுடன் நான் இங்கிருந்து புறப்படுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், அடுத்த வருடம் இலஙகையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பை சேர்ந்த தலைவர்களின் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் இலங்கையில் இடம்பெற்று வருவதாகவும் அவர் இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment