லண்டனில் நடந்த ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக எகிப்து நாட்டின் விளையாட்டு துறை மந்திரி இப்ராகிம் அகமத் கலில் (வயது 56) சென்றிருந்தார். அவர் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார். ஓட்டல் அறையில் இருந்து வெளியே வந்தபோது அங்கு ஒரு இளம்பெண், அவருடைய தாயார், சகோதரர் நின்று கொண்டிருந்தனர்.
திடீரென அவர்கள் அருகில் சென்ற அகமத் கலில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். பின்னர் இளம் பெண்ணின் தாயாரை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார். இதனால் அவர்கள் கூச்சலிட்டனர்.
இது சம்மந்தமாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். அவர் செய்த அத்துமீறல்கள் அனைத்தும் ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
மந்திரியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நீதிபதி ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
No comments:
Post a Comment