மஹிந்தவின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 230 பேர் தமிழ்நாட்டு பொலிஸாரினால் கைது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திருமாவளவன் தலைமை யிலான, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவாளர்கள் 30 பேர் தமிழ் நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி பகுதியில் சென்று கொண்டிருந்த ரயில் வண்டியை நிறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்திய போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சியின் சுமார் 200 அங்கத்தவர்கள் காஞ்சிபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயம் தொடர்பாக அறிந்தது முதல், இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்திலுள்ள எல்.ரி.ரி.ஈ ஆதரவான தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர். எல்.ரி.ரி.ஈக்கு ஆதரவாக அவர்களின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வதற்கு தமிழ் நாடு மாநிலத்தில் புலி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதுடன், ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை தடுப்பதும் அவர்களின் நோக்கமாகும்.
எனினும் இந்த சகல எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் மஹிந்த தனது இந்திய விஜயத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கின்றார்.
0 comments :
Post a Comment