குழந்தையை பிரசவித்து ஓடையில் வீசிய 18 வயது மாணவி கைது – தெரணியகலவில் சம்பவம்
தெரணியகல உடபாக தோட்டம் ஒன்றின் ஓடையிலிருந்து சிசுவொன்றின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், 18 வயது பாடசாலை மாணவி ஒருவர் தெரணியகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த 18 வயது மாணவி, இளைஞன் ஒருவரை காதலித்துள்ளார் அதன் விளைவாக கர்ப்பமான மாணவிக்கு 2012-09-22ம் திகதியன்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதன்போது மாணவியின் காதலன் அவருக்கு மருந்து வகை ஒன்றை வழங்கியுள்ளார்.
அதன் பின்னர், 2012-09-23ம் திகதி இரவு குறித்த மாணவி மலசலகூடம் சென்றபோது பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையிலேயே சிசு ஓடையில் வீசி எறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த மாணவி சிகிச்சைகளுக்கென அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவியின் காதலன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனவும் தெரணியகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment