மாலக தாக்கியது 13 கெமராக்களில் பதிவு! ஆனால் மேஜரே பெல்டி அடிக்கின்றார்.
அண்மையில் கொம்பனித் தெரு ஹேட்டலொன்றில் இராணுவ மேஜர் ஒருவரை, மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா தாக்கியது அக்ஹேட்டலில் பொருத்தப்பட்டிருந்த 13 கெமராக்களில் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 50 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், அவர்களில் அந்த ஹேட்டலின் பணியாளர்கள் பலரும் அடங்குகின்றனர் என்றும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த சத்தியக் கடிதம் ஒன்றில், சந்தேக நபர்களான மாலக சில்வா மற்றும் ரொகான் விஜேரத்ன ஆகியோர் தன்னைத் தாக்கவில்லை என்று, தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேஜர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment