அமெரிக்கவை கதிகலங்கவைத்த தாக்குதலுக்கு, இன்றுடன் 11 ஆண்டுகள் பூர்த்தி!
அமெரிக்கவை கதிகலங்க வைத்த செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு, இன்று டன் 11 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி, அல் கைதா தீவிரவாதிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டனர். அமெரிக்காவிற்கு சொந்தமான 4 வானூர்திகளை கடத்திய அல் கைதா இயக்கம், இந்த தாக்குதலை மேற்கொண்டது.
அமெரிக்க எயார் லைன்ஸ் வானூhதிகளை பயன்படுத்தி, காலை 08.46 அளவில் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள உலக வர்த்தக மைய கட்டிடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
175 யுனைட்டட் எயார்லைன்ஸ் வானுர்தியை பயன்படுத்தி, கட்டிடத்தின் தென்பகுதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இக்கட்டிடங்கள் அழிவடைந்து கொண்டிருக்கும்போது, காலை 09.37 அளவில் அமெரிக்க எயார்லைன்ஸ் 77 மற்றும் யுனைட்டட் எயார் லைன்ஸ் 93 வானூர்திகளை பயன்படுத்தி, கோபுரங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், பெண்டகன் கட்டிடம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இரு மணித்தியாலங்களுக்குள், இக்கடடிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. சம்பவத்தில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கொல்லப்பட்டனர். அமெரிக்கா மீது மேற்கொள்ளப்பட்ட இந்த பாரிய தாக்குதலுடன் தொடர்புபட்ட ஒசாமா பின் லாடனை கொலை செய்ய, அமெரிக்கா சகல முயற்சிகளையும் எடுத்தது.
2001 ஆம் ஆண்டு தொடக்கம் அதற்காக, பல மில்லியன் டொலரை அமெரிக்கா செலவிட்டது. இறுதியில், பாகிஸ்தான் அபோட்டாபாத் பிரதேசத்திலேயே, இவர் கொலை செய்யப்பட்டார். அமெரிக்க உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகனில் இன்று இது தொடர்பான ஞாபகார்த்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், இன்று முழுநாளும் பல வைபவங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment