மிருகத்தனமாக என்னை அடிக்கிறார் – மனைவி. பா.உ ரங்கே பண்டார தலைமறைவு!
புத்தளம் மாவட்ட ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவைக் கைது செய்வதற்கு பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் செயலகத்தால் விசேட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. ரங்கே பண்டார தினந்தினம் தனக்கு தொந்தரவு கொடுக்கின்றார் என்றும், மனிதத்தன்மையற்ற முறையில் அடிக்கின்றார் என்றும் அவரின் மனைவி கூறுகின்றார் என்று பொலிசில் செய்யப்பட்ட முறைபாட்டைத் தொடர்நது இந்த விசாரணை ஏற்பாடாகியுள்ளது.
இதுவரைக்கும், பா.ம. உறுப்பினர் ரங்கே பண்டார இருக்கும் இடம் பற்றி அறிய முடியவிலை என்று பிஸ் கூறகின்றது. தாக்கப்பட்டதினால் அவரின் மனைவி ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார்.
0 comments :
Post a Comment