பொது மக்கள் பாதுகாப்புப் படை (ஊர்காவல்படை) என்பது வெறும் பெயர் பலகை அமைப்புதான், அவர்கள் சேவையில் உறுதிப்படுத்தப்படவில்லை அவர்களுக்கு ஓய்வூதிய உரிமை இல்லை என்று மவிமு பா.உ. அனுரகுமார திசாநாயக்கா பாராளுமன்றத்தில் விடுத்துள்ள ஒரு விசேட அறிக்கையில் கூறியிருக்கின்றார். பயங்கரவாத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்காலத்தில் அவர்கள் புரிந்த பாரிய சேவைக்காக அவர்கள் நல்ல முறையில் கவனிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறப்பிட்டுள்ளார்.
ஊனுகு உறுப்பினர்கள் தற்போது செங்கல் வெட்டுதல், சேனைப்பயிர் செய்தல், விவசாயிகள், மீன் பிடிப்பவர்களாக வேலை செய்விக்கப்படுகிறார்கள். சில பகுதிகளில் மீன்பிடி வருமானத்தில் 300 ரூபாவை ஊனுகு க்குக்கொடுக்கச் செயகிறார்கள். சில பகுதிகளில் அவர்கள் வாங்கும் சம்ளத்துக்கு மாதம் 3000 முதல் 7000 வரை செங்கல் வெட்டச் செய்கிறார்கள். அவர்களுக்கு விசேட அலவன்சோ காப்புறுதியோ கிடையாது என்றும் திசாநாயக்க கூறினார்.
இது தொடர்பாக சபை அடுத்து கூடும்போது பதிலளிக்கப்படும் என்று நீர்ப்பாசன அமைச்சரும் சபை முதல்வருமான நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்தார்.
No comments:
Post a Comment