Wednesday, August 15, 2012

என்றென்றும் பாசப்பிணைப்புள்ள கிழக்கின் புலம்பெயர் மக்களுக்கு இம்மடலை வரைகிறேன்.....

கிழக்குமாகாணம் சுதந்திரமடைந்த காலம்தொட்டு எந்தவிதமான அபிவிரு த்திகளையும் அடைந்திருக்கவில்லை. குறிப்பாக கல்வியிலும்சரி உட்கட்டமைப்புகளிலும்சரி அத்துடன் வேலைவாய்ப்புகளிலும்கூட அது புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றது. எனினும் 2008இல் கிழக்குமாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் அது பாரிய வளர்ச்சி கண்டிருக்கின்றது என்பதனையாரும் மறுக்கமுடியாது.

இன்று கல்வி அரசியல் பொரளாதாரம் என்பனவற்றில் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமாக எமது மாகாணம் மாறி இருக்கின்றமையை பொறுத்துக்கொள்ளமுடியாத மேலாதிக்கவாதிகள் எமது மக்களை இன்னுமொரு 50 வருடம் பின்தள்ள எத்தணிப்பது புலனாகிறது.

போராட்டகாலத்தில் கிழக்கின் வீரம் செறிந்தபோராளிகள் தங்கள் இன்னுயிரை தியாகம்செய்ய வடக்கின் மேட்டுக்குடிவர்க்கம் புலம்பெயர் மக்களின் பணத்தினைமட்டும் வழங்கி அவர்களது பிள்ளைகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் விட்டு கற்ப்பித்திருந்ததனை வரலாறு அறியும்.

ஆனால் இன்று நிலைமைகளோவேறு. கிழக்கின் கல்விச் சமூகம் தனது சொந்தக்காலில் நிற்ப்பதற்க்கு தலைப்பட்டிருக்கின்றநேரம். நாங்கள் எங்களை நாங்களே ஆழகின்றநிலைக்கு தலைப்பட்டுவிட்டோம்.

இன்று வடக்கின் மேலாதிக்க ஊடகங்கள் எமது கிழக்கு மக்களை தவறான வழியில் அழைத்துச் செல்லப்பார்க்கின்றனர். இந்நிலையில் கிழக்கில் பிறந்து புலம்பெயர்ந்துவாழும் மக்களுக்குஓர் தார்மீக வரலாற்றுக்கடமை உள்ளது, அதுதான் எதிர்வரும் எட்டாம் திகதி இடம்பெற இருக்கின்ற வரலாற்றுமாற்றத்தை கொண்டுவர இருக்கும் முக்கியம்வாய்ந்த கிழக்குமாகாணசபைத் தேர்தலில், எமது பிரதேசத்தினைச் சேர்ந்த தமிழ் மகன் ஒருவனைநாம் கிழக்கின்; முதலமைச்சராக்குவதானால், நிச்சயம் ஆழும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரை ஆதரிப்பதன் மூலமே அதுசாத்தியமாகும் என்பதை தெரிவிக்கவிளைகிறேன்.

தமிழ் கூட்டமைப்பு தாங்கள் முதலமைச்சராக வரமுடியாது என்று தெரிந்தும் ஒரு முஸ்லிம் பிரதிநிதிக்கு முதலமைச்சராகும் வாய்ப்புக்கான கதவுகளைத் திறந்து ஒருபாரிய துரோகத்தினை இம்மக்களுக்கு இளைத்துநிற்கிறது. இதனை இம்மக்கள் வரலாற்றில் ஒருகறைபடிந்த நிகழ்வாகவே கருதுகிறார்கள்.

இந்த இக்கட்டானநிலையில் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற புலம்பெயர்வாழ் சமுகம் வரலாற்று மாற்றத்தினை ஏற்ப்படுத்த இருக்கும் இந்ததேர்தலில் ஒருமுதலமைச்சராக கிழக்கின் தமிழ்மகன் வருவதற்க்கான பங்களிப்பினை உங்கள் கருத்துப் பரப்புரை மூலமாக எடுத்துச்செல்லவேண்டுமென அன்பாககேட்டுக்கொள்கிறோம்.


நீதியின் தீ பத்தை ஏற்றிய கைகளின் லட்சிய பயணமிது
இதில் சத்தியசோதனை எத்தனை நேரினும் தாங்கிடும்இதயமிது
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்



கிழக்கின் தன்மானமுள்ள தமிழ் மகன்.

வாசகர்மடல்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com