Saturday, August 25, 2012

பெண்கள் மீதான சேட்டையை தடுக்க புதிய திட்டம்

பொது இடங்களில் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் குறுந்தகவலில் மூலம் முறைப்பாடு செய்யும் வகையில் விசேட திட்ட மொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், இத்திட்டம் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சட்ட உதவி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் இது தொடர்பில் பொலிஸாரிடம் கலந்துரையாட உள்ளதாக தெரிவித்த ஆணைக்குழு, இவ்வாறான குறுந்தகவல் முறைப்பாடு மூலம் பெண்களுக்கு உறுதியான தனியுரிமை மற்றும் பாதுகாப்பு வழங்க முடியும் என தெரிவித்துள்ளது.

பெண்கள் மீதான சேட்டையில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்படுவார்களாயின், வன்முறைக்கு எதிரான குற்றச்சாட்டில் 5 ஆண்டுகால சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment