அபிவிருத்தித் திட்டங்களுக்காக அவுஸ்த்திரேலிய தொண்டர்களின் சேவையைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு அவுத்திரேலியாவுடன் ஒரு துணை உடன்படிகையைச் செய்து கொள்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரான ஜனாதிபதியின் முன்மொழிவின் பேரில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அவுஸ்த்திரேலிய தொண்டர்களுக்கு, இலங்கைத் தொண்டர்களுடன் தமது திறமைகைளையும் அறிவையும் குறுகிய (6 மாதம் ) மற்றும் நீண்டகால (3 ஆண்டுகள்) தவணை அடிப்படையில் பகிர்ந்து கொள்ளவும் அவுத்திரேலியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையில் சமூகங்கள் மற்றும் அமைப்புகளிடையிலாள உறவை வளர்க்கவும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
இலங்கையில் உள்ள அவுஸ்-எய்ட்ஸ் டிவலப்மெண்ட் கோர்ப்பரேசன் ப்ரொக்ராம்மின் ஒத்துழைப்புடன் அதன் தொண்டர்கள் சேவையில் அமர்த்தப்படுவார்கள். இதற்கான அனைத்து செலவையும் அவுத்திரேலியா பொறுப்பேற்கும்.
No comments:
Post a Comment