ரவூப் ஹக்கீம் இனவாத பிரசாரம் செய்கின்றமை நிரூபிக்கப்பட்டால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
இனவாத அடிப்படையில் பிரசாரம் செய்து வாக்குகளைப் பெற முயற்சிக்க கூடாது எனவும், அபிவிருத்தியையும், கொள்கையையும் விளக்கியே வாக்குகளைப் பெறவதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என தெரிவித்த ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல, அமைச்சர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணத்தில் இன அடிப்படையில் பிரசாரத்தை பரப்பி வாக்குகளைப் பெற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இவ்வாறே தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு எதிராக அரசியல் கட்சி மட்டத்தில் தீர்மானம் எடுப்போம் என கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சில கட்சிகள் கிழக்கில் இனவாதத்தைப் பரப்பி பிரசாரம் செய்வதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. ஊடகவியலாளர்களும் கேள்விகளை எழுப்புகின்றனர். எனக்கு உண்மையில் அது தொடர்பில் தெரியாது எனவும், அவ்வாறு இனவாதத்தைப் பரப்பி பிரசாரம் செய்தால் மக்கள் தகுந்ந தண்டணை கொடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment