பிலிப்பீன்ஸ் விமான விபத்து: கரை சேர்க்கப்பட்ட விமானியின் சடலம்.
பிலிப்பீன்சில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த ‘பைப்பர் செனக்கா’ இலகு ரக விமான விபத்தில், பிலிப்பீன்ஸ் உள்துறை அமைச்சர் ëஜஸ்ஸி ராப்ரெடோ பலியானார். அந்த விமானத்தின் இரு விமானிகள் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது, இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த விமானம் விழுந்து நொறுங்கியது.
ராப்ரெடோவின் உதவியாளர் உயிருடன் மீட்கப்பட்டார். இந்த நிலையில், நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தில், தமது இருக்கையில் இருந்தவாறு ஒரு விமானியின் உடல் இருப்பது கண்டறியப்பட்டது. படகின் மூலம் அவரது உடலைக் கரைக்குக் கொண்டு வந்தனர் மீட்புப் பணியாளர்கள். இணை விமானியான நேப்பாள மாணவர் குறித்து நேற்று மாலை வரை எந்த விவரமும் தெரியவில்லை. இதனிடையே, அந்நாட்டுப் போக்குவரத்து, தொடர்பு அமைச்சர் விமான விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேநேரம் சீனா, தைவான் நாட்டுக் குடிமக்களாக இணையம் மூலம் ஆள்மாறாட்டம் செய்த 357 வெளிநாட்டினரை பிலிப்பீன்ஸ் போலிஸ் கைது செய்தது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள், தைவானியர்கள்தான் எனப் போலிஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
போலிசார், வழக்கறிர்கள் போலவும் நீதிமன்றங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் போலவும் நடித்து ஒரு கும்பலின் கீழ் செயல்பட்ட அவர்கள் பலரை ஏமாற்றியுள்ளனர். தங்களிடம் ஏமாந்தவர்களிடம் அவர்களின் வங்கிக் கணக்குகள் பண மோசடிக்காகவும் பயங்கரவாத நிதி உதவிக்காகவும் பயன்படுத்தப்படுவதாக மிரட்டியுள்ளனர்.
பின்னர் அவர்களின் கணக்கில் இருந்து அந்தக் கும்பலின் கணக்கிற்குப் பணத்தை மாற்றுமாறு நெருக்குதல் கொடுத்தனர். திட்டமிட்டுக் குற்றம் புரிவோருக்கு எதிராக பிலிப்பீன்சில் நடத்தப்பட்ட ஆகப் பெரிய கைது நடவடிக்கை இது.
0 comments :
Post a Comment