போருக்குப் பின்னரான அமைதியான சூழ்நிலை தொற்றுத் தடுப்பு மற்றும் காயங்கள் முகாமைத்துவம் தொடர்பான ஆறாவது ஆசிய பசுபிக் இராணுவ தாதியர் மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு வழிவகுத்தது என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இலங்கைகு வந்து பார்த்த பிறகுதான் இந்து சமுத்திரத்தின் முத்து என்பதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொண்டதாக ஆரம்ப நிகழ்ச்சியல் உரையாற்றிய அமெரிக்க வான்படை மேஜர் ஜெனரல் கிம்பர்லி சின்கால்சி கூறினார். முன்பு இலங்கை அதிர்ஷ்ட நாடு என்று பொருள்படும் சேரன் துவீபம் என்று அழைக்கப்பட்டது. மாநாட்டுக்காக தென்னாசிய நிகழ்விடமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டமை மகிழ்ச்சி அளிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை வான் படையின் ஒத்துழைப்புடன் 11 ம் திகதி வரை கொழும்பு தாஜ் சமுத்தரா ஓட்டலில் இடம் பெறும் இம் மாநாட்டில் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் என்று 600 இராணுவத்தினர் கலந்து கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment