கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டது, சட்டவிரோதமானதென தெரிவிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இராசையா துரைசிங்கத்தினால் சமர்ப்பிக் கப்பட்ட மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடையும் முன்னர், அதனை கலைக்க முடியாதென, கடந்த ஏப்ரல் மாதம் பிரேரணையொன்று இம்மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்டதாகவும், இவ்வாறான நிலையில் அதனை கலைப்பதற்கு மேற்கொண்ட தீர்மானம், சட்டவிரோதமானதென தெரிவித்து மனுதாரர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
அரசியல் யாப்பின் பிரகாரம் முதலமைச்சர் ஒருவர் கோரிக்கை விடுத்தால், மாகாண சபையை கலைக்கும் அதிகாரம், ஆளுநருக்கு இருக்கின்றது எனவும், இதன் பிரகாரம் கிழக்கு மாகாண சபை சட்டரீதியாகவே கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
No comments:
Post a Comment