Friday, August 10, 2012

வடகிழக்கில் வெள்ளைவேன் பூச்சாண்டி, கொழும்பில் மகிந்தருடன் வெள்ளையுடையில்.

மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு வெள்ளை வானில் வந்த  குழுவொன்றினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் சோமசுந்தரம் யோகானந்தராஜா இன்று வெள்ளிக்கிழமை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் எழுத்து மூலம் புகார் செய்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வழங்கியுள்ள புகாரிம் மேலும் உள்ளவாறு:
 
மட்டக்களப்பு நொச்சிமுனை மற்றும் பூநொச்சிமுனை பகுதிகளில் நேற்று வியாழக்கிழமையும், இன்று வெள்ளிக்கிழமையும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை அங்கு வந்த சிலர் எமது பிரச்சார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு அச்சுறுத்தலும் விடுத்துள்ளார்கள்.
 
குறிப்பாக இன்று வெள்ளிக்கிழமை நொச்சிமுனை பகுதியில் ஆதரவாளர்களுடன் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை சில பெண்கள் உட்பட வெள்ளை வானில் வந்த குழுவொன்று எமது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரங்களை பறித்து சென்றுள்ளார்கள்.
 
அவர்களினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்தும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாமல் திரும்பியுள்ளேன். தங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்திய இந்நபர்கள் குறித்த பகுதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் எவரும் வரக் கூடாது என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்கள்.
 
குறித்த சம்பவமானது சுதந்திரமான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு தடையாக உள்ளது. எனவே மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் வேட்பாளர்கள், எந்த கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சுதந்திரமான முறையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடிய சூழ்நிலையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
 
என தெரிவிக்கப்பட்டுள்ள அந்த முறைப்பாட்டு கடிதப் பிரதிகள்  தேர்தல் ஆணையாளர் நாயகம், தேர்தல் செயலகம், இணைப்பாளர் 'கபே', தலைவர், இலங்கை தமிழரசு கட்சி; மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு செயலகம் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கில் வாக்குகளுக்காக இவ்வாறான போலிகுற்றச்சாட்டுக்களை சுமத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடகிழக்கு வெளியே சென்றால் இலங்கை அரசுடன் அரச விருந்தினர்களாக கலந்து கொண்டு கொஞ்சிக்குலாவுவதை மக்கள் மறந்துவிடக்கூடாது. தமிழ் தேசியக்கூட்டமைப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கும் இப்படத்திற்கும் ஏதாவது தொடர்புண்டா என்பதை மக்கள் சற்று யோசிக்கவேண்டும்.

இலங்கை அரசாங்கத்தை விமர்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவன் சம்பந்தன் அரச விருந்தொன்றில் கலந்துகொண்ட படம் இது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com