சிங்களத் தலைவர்களை விட அதிகமாக தமிழ்த் தலைவர்கள் புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர் -ஜி. எல். பீரிஸ்
26 ஆண்டுகால இராணுவ முறுகல் நிலையும் யுத்தமும் முறியடிக்கப்பட்ட பின்னரும், தமிழ்ப் புகலிடக்காரர்கள் இலங்கையின் ஸ்திரப்பாட்டுக்கு கடும் சவாலாக இருக்கிறார்கள் என்று வங்காள தேசத்தின் டாக்கா நகரில் "ஒப்புரவு, வாய்ப்பு மற்றும் வலுவூட்டல் – ஒரு தென்னாசிய தொலை நோக்கு" என்ற தனது ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து உரையாற்றிய இலங்கை வெளிநாட்டமைச்சர் பேராசிரியர். ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பிரச்சினை நடந்த காலத்தில் தமிழர் மத்தியில் எல்.ரி.ரி.ஈ யினர் பற்றிய அச்சம் காணப்பட்டதாகவும், சிங்களத் தலைவர்களை விட அதிகமாக தமிழ்த் தலைவர்கள் புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
1983 ல் இருந்து வடக்கு கிழக்குப் பகுதியில் தனித் தமிழ் ஈழம் அமைக்கப் புலிகள் போராடி வந்தார்கள்.இராணுவம் அங்கு 2009 புலிகளை முறியடித்தது. இலங்கையில் சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையிலான பிரச்சினை கலாச்சார இடைவெளியே தவிர பொருளாதாரப் பாகுபாடு அல்ல வென்றும், போருக்குப் பிறகு இலங்கை துரிதமாக முன்னேறி வருகின்றது என்றும், தற்போது இலங்கையின் சுற்றாடல் துறை பிரதான வருமானம் தரும் துறையாக மாறியுள்ளது என்றும் பேராசிரியர் பீரிஸ் தனது உரையில் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment