Sunday, August 19, 2012

ஹக்கீமும் அசாத் சாலியும் இனவாத பிரச்சாரத்தை நிறுத்தவேண்டும். பௌத்த பலசேனை எச்சரிக்கை.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அமைச்சர் ரவூப் ஹக்கிம் மற்றும் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் அசாத் சாலி ஆகிய அரசியல்வாதிகள் இனவாதம், மதவாதத்தைக் கையில் எடுத்து செய்யும் மூடத்தனமான பிரச்சாரங்களை உடன் நிறுத்த வேண்டும் என்று கொழும்பு 5 ல் உள்ள ஸ்ரீ சம்புத்தத்த ஜயந்தி மண்டபத்தில் இடம் பெற்ற ஊடக மாநாட்டில் பௌத்த பலசேனையின் தலைவர் வண. கிரம விமல ஜோதி ஹிமி கூறினார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அவர்கள் இனவாதத்தை மதவாதத்தை தூண்டுகிறார்கள். அவை கடுமையானவை. முஸ்லிம் அடிப்படைவாதத்தை மாகாணத்தில் பரப்புகிறார்கள். அதை அவர்கள் உடன் நிறுத்த வேண்டும். 30 வருட யுத்த்தின் பின்னரும் இவ்வாறு இனவாத மதவாத பிரச்சாரங்களை அவர்கள் செய்யக்கூடாது. இது தொடர்பாக அரசாங்கமோ அதிகாரிகளோ கவனம் எடுப்பதில்லை. அரசாங்கம் அதிக பொறுப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பௌத்த பலசேனையின் செயலாளர் வண. கலகொடஅத்தே ஞானசார ஹிமி பேசுகையில் கிழக்கு மாகாணத்தில் ஆங்காங்கே முஸ்லிம் அடிப்படைவாத பேய்கள் தலையெடுக்க ஆரம்பித்துள்ளன. ரவூப் ஹக்கிம் மற்றும் அசாத் சாலி இனவாத்த்தை தூண்டும் வகையில் நடக்கிறார்கள். அசாத் சாலிக்கு நாங்கள் எச்சரிக்கிறோம் அதிகம் துள்ள வேண்டாம் என்று. அரசியல் செய்வதற்கு முன்னர் அவர்கள் இந்த நாட்டின் வரலாற்றைப் படிக்க வேண்டும் என்று.

கிழக்கு மாகாணத்தில் பௌத்தருக்கு உரிமை இருக்கின்றது. அங்குள்ள சில பன்சலைகளைத் தேடிப்பிடித்து சிங்களவரின் தாய் நிலங்கள் சிலவற்றை நாங்கள் கண்டுபிடித்தது எவ்வாறு? நாங்கள் அமைதியாக இருக்கும் போதுதான் இவர்கள் கத்துகிறார்கள். இவர்களுக்கு நாங்கள் கூறுகிறோம் பௌத்தர்களை இனியும் துன்புறுத்த வேண்டாம் என்று. இந்த சகல சக்திகளுக்கும் எதிராக புதிதாக பௌத்த தேசிய அமைப்பு அவசியமாகியுள்ளது. அதைத்தான் நாங்கள் படிப்படியாக கட்டியெழுப்புகிறோம் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment