மாகாண சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, நாளை மற்றும் நாளை மறுதினம்.
மூன்று மாகாண சபைகளுக்காக தபால் மூலம் வாக்களிக்க, ஒரு லட்சத்து 818 அரச ஊழியர்கள் தகைமை பெற்றுள்ளனர். அநுராதபுரம் மாவட்டத்திலேயே, கூடுதலான தபால் மூல வாக்காளர்கள் உள்ளனர். இவ்வெண்ணிக்கை 35 ஆயிரமாகும். 50 ஐ விட கூடுதலான வாக்காளர்கள் கொண்ட வாக்குப்பதிவு மத்திய நிலையங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, தேர்தல் அலுவலர் ஒருவரை சேவையில் ஈடுபடுத்த, திட்டமிடப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினங்களில், தபால் மூல வாக்குப்பதிவு இடம்பெறுவதுடன், எஞ்சும் வாக்குச்சீட்டுக்களை உரிய மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கையளிக்குமாறும், பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment