தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட அதாவுல்லாவின் ஆட்கள் மடக்கி பிடிப்பு.
கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடும் வேட்பாளர் தவத்தின் அக்கரைப்பற்றில் உள்ள வீட்டினுள் இன்று இரவு (12.08.2012) புகுந்து அட்டகாசம் புரிய வந்த அமைச்சர் அதாஉல்லாவின் அடியாட்களை மடக்கிப்பிடித்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30மணியளவில் வேட்பாளர் தவத்தின் வீட்டின் மீதும் ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளவந்த அமைச்சர் அதாஉல்லாவின் அடியாட்களை தவத்தின் ஆதரவாளர்கள் மடக்கிப்பிடித்து அக்கரைப்பற்று பொலிசாரை வரவழைத்து ஒப்படைத்துள்ளனர். ஏனையவர்கள் தப்பித்துள்ளனர் சுமார் முப்பதிற்கு மேற்பட்டவர்கள் இத் தாக்குதல் சம்பவத்திற்கு தனது வீட்டுக்கு வந்ததாகவும் இன்று திங்கட்கிழமை எனது தலைமையில் அக்கரைப்பற்றில் மிகப்பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் நிகழ்வை நடக்கவிடாமல் செய்வதுமே இந்த அடியாட்களின் நோக்கம் என வேட்பாளர் தவம் தெரிவித்தார்.
இவ் இப்தார் நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீம் மற்றும் ஏனைய கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment