Saturday, August 18, 2012

கருப்புச் சட்டை அணிந்த பயங்கரவாதிகளுடன் ஹக்கீம்! ஹக்கீமுக்கு பின்னால் த. தே.கூட்டமைப்பு.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கிம் கருப்புச் சட்டை அணிந்த பயங்கரவாதிகளை அக்கரைப்பற்றுக்கு அழைத்து வந்து பயமுறுத்தி வாங்கு பெற முயற்சிக்கின்றார் என்று தேசிய முஸ்லிம் காங்கிஸ் தலைவர் அத்தாவுல்லா ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக அவர் நோன்பு சமயத்தில் அக்கரைப்பற்றுக்கு வந்து இனவாதக் கூச்சலிடுவதும், சிங்கள-மூஸ்லிம், தமிழ்-முஸ்லிம் இனவாதத்தை ஏற்படுத்துவதும், பள்ளிவாசல்ளை உடைக்கச் செய்வதும் அவரது வழக்கமாக இருக்கின்றது. அவருக்குப் பின்னால் வெளிநாட்டு அரசுகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் செயல்படுகின்றன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment